×

‘பாரிஸ், முனிச் நகரங்களில் வாழ அதிக பணம் தேவை’ :பொருளாதார வல்லுனர்கள் குழு ஆய்வின் தகவல்

பாரிஸ், :அதிக செலவு செய்ய வேண்டிய நகரங்களின் (காஸ்ட் ஆஃப் லிவிங்) பட்டியலில் தற்போது பாரிஸ் மற்றும் முனிச் நகரங்கள் இடம் பிடித்துள்ளன.உலகின் பொருளாதார வல்லுனர்கள் குழு, 130 நாடுகளின் பல்வேறு நகரங்களில் மக்களின் வாழ்க்கை தரம் குறித்த ஆய்வுகளை, சமீபத்தில் மேற்கொண்டது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த ஆய்வில், பிரான்சின் தலைநகர் பாரிஸ் மற்றும் ஜெர்மனியின் 3வது பெரிய நகரமான முனிச்சில் வாழ்வதற்கு அதிக பணம் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது மனிதன் உயிர்வாழத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான அடிப்படையான 138 பொருட்களின் விலை மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் இந்த நகரங்களில் மிகவும் அதிகம் என்பதால், இங்கு வாழ்வதற்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டும்.

‘உணவு, உடை, குடிநீர், வாடகை, கல்வி, மின்சாரம் மற்றும் இணையதளம் உள்ளிட்டவற்றுக்காக மக்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அதிகம் செலவு செய்ய வேண்டிய நகரங்களின் பட்டியலில் தற்போது ஹாங்காங் உச்சத்தில் உள்ளது. அதனுடன் பாரிஸ், முனிச் நகரங்களும் இணைந்துள்ளன. சிங்கப்பூர், டெல் அவிவ், ஒசாகா, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன.  கொரோனாவின் தாக்கம் காரணமாக பெரு நகரங்களில் சமீப காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது’  என்று பொருளாதார வல்லுனர்கள் குழு, தெளிவான பட்டியல்களுடன் அறிவித்துள்ளது.


Tags : Paris ,Munich , ‘Paris, Munich, more money, economics, experts
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில்...